கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் மூட நடவடிக்கை : டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
பொட்டலூரணி பகுதியில் அமைந்துள்ள தனியார் மீன் கழிவு ஆலைகளை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.;
பொட்டலூரணி பகுதியில் அமைந்துள்ள தனியார் மீன் கழிவு ஆலைகளை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தை சுற்றி மூன்று இடங்களில் தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக கிராமங்களில் வாழக்கூடிய பொதுமக்கள் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர் மேலும் மீன் கழிவு ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஓடைகளில் கொட்டப்படுவதால் விவசாயமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஜனநாயக முறையில் மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு மற்றும் பல்வேறு கட்ட போராட்டங்களில் சுமார் 400 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி பொட்டல்லூரனி கிராமங்களுடன் பொட்டலூரணி கிராமப் பகுதியில் அமைந்துள்ள தனியார் மீன் கழிவு ஆலைகள் குறித்து நேரடியாக கிராம மக்களுடன் சென்று அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் ஆலை முன் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசியல் பின் புலத்துடன் நடைபெறும் இந்த தனியார் கழிவு மீன் அஆலைகள் முற்றிலுமாக கெட்டுப்போன மீன்களை வெளி மாநிலங்களில் இருந்து லாரி லாரி ஆக கொண்டு வந்து மீன் எண்ணெய் மீன் ஆயில் போன்றவற்றை தயாரிக்கிறார்கள். இதன் மூலம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதுடன் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த துர்நாற்றம் காரணமாக மூச்சுத் திணறல் மற்றும் தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மீன் கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாததால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இந்த மூன்று தனியார் மீன் கழிவு ஆலகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் புதிய தமிழகம் கட்சி அந்தப் பகுதி மக்களுடன் சேர்ந்து ஆலையை மூட போராட்டம் நடத்துவதுடன் சட்டபூர்வமான நடவடிக்கையிலும் ஈடுபடும் என தெரிவித்தார்.