ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு;
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு குழு கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ரூபா, கல்லூரி செயலாளர் ரோசாலி, துணை முதல்வர் எஸ். எம்.டி.மதுரவல்லி ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தமிழ் துறை பணி ஓய்வாளர் சரோஜா ஜோன்ஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் பழைய மாணவிகளை வரவேற்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஆடை வடிவமைப்பு துறை ஜாய் மேரி, உணவியல் துறை கரோலின், வணிகவியல் துறை ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.