கோவை நாய் பயிற்சியாளருக்கு மிரட்டல் விடுத்த காவலர் கைது !

நாய் விவகார தகராறு: ஜாதி துஷ்பிரயோகம், மிரட்டல் – காவலர் கைது;

Update: 2025-08-10 12:27 GMT
கோவை, வடவள்ளி அருகே நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஊட்டியைச் சேர்ந்த மருது விநாயகம் என்பவர் தனது நாயே பயிற்சிக்கு பெற்று உள்ளார். மருது விநாயகம் நெல்லையில் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வருகிறார். மருது விநாயகம் பயிற்சி மையத்தில் இருந்த வேறு ஒரு சிப்பிப்பாறை நாயை பார்த்ததும் அதை வளர்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு உள்ளது. உடனே பயிற்சியாளர் இடம் அந்த சிப்பிப்பாறை நாயை தனக்கு கொடுக்கும்படி கேட்டு உள்ளார். அப்போது பயிற்சி மைய உரிமையாளர் சிவன் ஞானம் அதை வழங்க முடியாது என்று மறுத்து உள்ளார். இதனால் போலீஸ் ஏட்டுக்கும் பயிற்சி மைய உரிமையாளருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது போலீஸ் ஏட்டு அவரை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டி உளளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நாய் பயிற்சி மைய உரிமையாளர் சிவன் ஞானம் காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து காவலர் ஏட்டு விடம் அதிகாரிகள் விசாரித்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறை ஏட்டு மருது விநாயகம். உடனே பயிற்சி மைய உரிமையாளருக்கு போன் செய்து போலீஸ் உதவி கமிஷனரிடம் புகார் செய்கிறாயா? வேறு யாரிடம் வேண்டுமானாலும் சொல் என்னை ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டி உள்ளார். இதுகுறித்து பயிற்சியாளர் சிவன் ஞானம் வடவள்ளி காவல் நிலையத்தில் ஆடியோ ஆதாரத்துடன் புகார் செய்தார். புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் ஏட்டு மருது விநாயகர் கைது செய்தனர்.

Similar News