கோவையில் ரக்ஷா பந்தன் விழா !
சகோதரர்-சகோதரிப் பாசத்தை கொண்டாடிய கோவை ரக்ஷா பந்தன்;
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், வட மாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்கள் பாரம்பரிய ரீதியில் ரக்ஷா பந்தன் விழாவை நேற்று கொண்டாடினர். காலையிலிருந்து விரதம் இருந்து, மாலை நேரத்தில் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி, இனிப்புகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். பெண் குழந்தைகளும் உற்சாகமாக பங்கேற்றனர். குடும்பத்துடன் ரக்ஷா பந்தன் பாடல்களைப் பாடியதும், பரிசுகள் பரிமாறியதும் விழாவில் மகிழ்ச்சியை அதிகரித்தது.