ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் பலி
ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரிஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.;
அரியலூர், ஆக.10 - ஜெயங்கொண்டம் அருகே இடங்கண்ணி கிராமத்தில் எலக்ட்ரீசியன் வேலை செய்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமம் மேலத்தெருவை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர். எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் வீட்டில் பாத்ரூமுக்கு மின் இணைப்பு வழங்கும் வேலை பார்த்தள்ளார். அப்போது அவர் கையில் வைத்திருந்த கட்டிங் மிஷன் மூலம் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது விக்னேஷ் மயங்கிய நிலையில் தரையில் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து அவரை அருகில் உள்ள தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் விக்னேஷன் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். எலக்ட்ரீசியன் விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.