கமலுக்கு கொலை மிரட்​டல்: துணை நடிகர் மீது மநீம புகார்

கமல்​ஹாசனுக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக துணை நடிகர் மீது மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யினர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​துள்​ளனர்.;

Update: 2025-08-11 02:25 GMT
நிகழ்ச்​சி​ ஒன்றில், மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் தலை​வரும், மாநிலங்​களவை உறுப்​பினரு​மான கமல்​ஹாசன் பேசும்போது, ‘சனாதன தர்​மம் பற்றி கருத்து தெரி​வித்​திருந்​தார். இதற்கு துணை நடிகர் ரவிச்​சந்​திரன் கடும் எதிர்ப்பு தெரி​வித்​து யூடியூப் சேனல் ஒன்​றுக்கு பேட்டி அளித்​த​ிருந்தார். அதில், சனாதன தர்​மம் பற்றி பேசிய கமல்​ஹாசனுக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதைத்​தொடர்ந்​து, மக்​கள் நீதி மய்​யம் கட்​சித் துணை தலை​வர் மவுரியா தலை​மை​யில் கட்​சி​யினர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ரவிச்​சந்​திரன் மீது நேற்று புகார் மனு அளித்​தனர்.

Similar News