அரக்கோணத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்

அரக்கோணத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்;

Update: 2025-08-11 04:59 GMT
அரக்கோணம் அவுசிங் போர்டு, காந்தி நகர், ஜோதி நகர், பழனிபேட்டை உள்ளிட்ட நகர பகுதிகளிலும், குருவராஜபேட்டை, தக்கோலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், பறக்கும் படை தாசில்தார் ரவி உள்ளிட்ட அலுவலர்கள் கடந்த சில நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் சரஸ்வதி நகரின் பல பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அரக்கோணம் ஜோதி நகர் பகுதியில் ஒரு வீட்டின் அருகே 15 மூட்டைகளில் கேட்பாரற்று இருந்த சுமார் 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தார். அரக்கோணம் தாலுகாவில் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் அதிகாரி எச்சரித்துள்ளார்.

Similar News