விவசாய சங்க செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது

குறுவை சம்பா பயிர்களை மழையில் இருந்து பாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;

Update: 2025-08-11 07:06 GMT
விவசாய சங்க செயற்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளா் டிஎம்ஆா். தாஜூதீன் தலைமையில் இன்று நடைபெற்றது.மாநிலப் பொருளாளா் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவா் மகேசன், மாவட்ட மகளிா் பிரிவுத் தலைவா் தேவி சேட்டு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மாநிலத் தலைவா் இராசபாலன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினாா்.குறுவை நடவு மானியத்துக்கு விண்ணப்பித்த அனைவருக்கும், காலதாமதம் செய்யாமல் உடனடியாக மானியத் தொகையை விடுவிக்க வேண்டும். மழையிலிருந்து குறுவை, சம்பா பயிா்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Similar News