ஜெயங்கொண்டம், சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கண மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி
ஜெயங்கொண்டம் ஆண்டிமடம், தா பழூர், மீன்சுருட்டி, உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் திடீர் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.;
அரியலூர், ஆக10- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையார்பாளையம்மற்றும் தா.பழூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளான இடங்கண்ணி, தென்கச்சி பெருமாள் நத்தம், மேலகுடிகாடு, கீழகுடிகாடு ,அண்ணக்காரன் பேட்டை, அணைகுடம், சோழமாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கண மழை பெய்து வருகிறது. இடி மின்னல் காற்று காரணமாக ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளிலும், பல்வேறு கிராமப்புறங்களிலும் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த நாள் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் குளிர்ந்த காற்று வீசுவதுடன், ஏரி குளம் குட்டைகளில் ஓரளவு நீர் நிரம்பியுள்ளதாக பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தற்பொழுதும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.