மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் அமைச்சர்கள் வழங்கல்

பாரம்பரியநாட்டுப் படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டைகள் மற்றும் மீனவர்கள் தேவையான பாதுகாப்பு மிதவை சட்டைகளை (லைவ் ஜாக்கெட்கள்) தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்;

Update: 2025-08-11 09:25 GMT
தூத்துக்குடி மாவட்டம் பாரம்பரியநாட்டுப் படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டைகள் மற்றும் மீனவர்கள் தேவையான பாதுகாப்பு மிதவை சட்டைகளை (லைவ் ஜாக்கெட்கள்) தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரியநாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வரும் 148 மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டைகள் வழங்குதல் மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு மிதவை சட்டைகள் (லைஃப் ஜாக்கெட்) வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மீன்வர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்கான அட்டைகள் வழங்கி மீனவர்களின் பாதுகாப்பு உபகரணமான பாதுகாப்பு மிதவை சட்டைகளை (லைவ் ஜாக்கெட்டுகள்) வழங்கினார்கள் இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது மானிய விலையில் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து மானிய விலையான 25 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 148 மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் புதிதாக படகு வாங்குபவர்களும் விண்ணப்பித்தால் உடனே அவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெளிச்சந்தையில் 65 ரூபாய்க்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 148 படகுகள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த 99 படகுகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 978 படகுகளுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி,கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாட்டு மண்ணெண்ணெய் பயன்படுத்தி செல்லும் நாட்டு படகுகளுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து மண்ணெண்ணெய் வாங்கப்பட்டு மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது மீனவர்களை நலனை காக்கின்ற அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது மேலும் மீனவர்களை பாதுகாக்கும் வகையில் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பது தடுப்பு சுவர் கட்டுதல் போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் மீனவர்களின் நலன் காக்கக்கூடிய அரசாக திமுக அரசும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாகத்தான் பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது இதுபோல் மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News