ஸ்ரீபெரும்புதூர் கொல்லாபுரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா
ஸ்ரீபெரும்புதூர் கொல்லாபுரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா - பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்சிப்பட்டு பகுதியில் ஶ்ரீ கொல்லாபுரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு தொடங்கியது. விழாவின் இறுதி நாளான இன்று மாலை அணிவித்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தி, மினி சரக்கு வாகனம், வேன் போன்றவற்றை வீதி வீதியாக இழுத்துச் சென்று நேத்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். இதையடுத்து உற்சவர் கொல்லாபுரி அம்மன் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வணங்கினர்.