ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில்  கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் -  சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில்  கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீர் -  சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.;

Update: 2025-08-11 12:48 GMT
அரியலூர், ஆக.11- ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் இரவு முழுவதும் மழை பெய்கிறது. இந்நிலையில் இன்று காலை முதலே வெப்பம் அதிகரித்து மாலையில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் லேசான மழையாக ஆரம்பித்து திடீரென   கனமழை பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக மழையின் காரணமாக பள்ளி முடிந்து செல்லும்  பள்ளி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வீட்டிற்கு செல்வதில் பெரிதும் சிரமப்பட்டனர் மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர் எனினும் தற்பொழுது கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஆடி மாத சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று இரவு முழுவதும் பெய்த மழைகளிலேயே ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News