அரக்கோணம் அருகே பெட்டிக்கடை புகையிலை பாக்கெட் பறிமுதல்!

பெட்டிக்கடை புகையிலை பாக்கெட் பறிமுதல்!;

Update: 2025-08-12 03:24 GMT
அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்பேரில் நேற்று போலீசார் தண்டலம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தபோது ஒரு பெட்டிக் கடையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டி ருந்த சுமார் 1 கிலோ 800 கிராம் புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் ஏழுமலை (வயது 50) மீது போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Similar News