ஆற்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!
காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்!;
ஆற்காடு பஸ் நிலையம் காமராஜர் சில அருகில் மக்களவை எதிர்க்கட் சித்தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமையில் நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவி ஷர்மிளா, மாவட்ட துணைத் தலைவர் விநாயகம், சிறுபான்மை துறை தலைவர் நிஷாத் அஹமத், ஆற்காடு வட்டார தலைவர் வீரப்பா, திமிரி வட்டார தலைவர் லீலா கிருஷ்ணன், நகர தலைவர் பியாரே ஜான், ஓ.பி.சி. பிரிரு மாவட்ட தலைவர் மொய்தீன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அருண், மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்தன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தேர்தல் கமிஷனை கண்டித்து கோஷம் எழுப்பினர்.