கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம்,தோவாளை தாலுகா பகுதியில் கட்டுமான தேவைகளுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லி,எம்சாண்ட் எடுத்துச் செல்லும் டெம்போக்களை போலீசார் தடுத்து, விதிகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். இதை கண்டித்து இன்று கன்னியாகுமரி டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். போலீசின் தவறான கெடுபிடியால் சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் குடும்பத்துடன் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது, போலீசார் உள்ளூர் டெம்போக்களை கட்டுப்படுத்தி கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் லாரிகளை அனுமதிப்பதாக குற்றச்சாட்டு முன் வைத்தனர்.