குமரி மாவட்ட மையக நூலகம் சார்பில் நூலக தந்தை டாக்டர் எஸ். ஆர். அரங்கநாதன் பிறந்த நாள், நூலகத்தின விழா இன்று ஒழுகின சேரியில் நடந்தது. குமரி மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) மேரி தலைமை வைத்தார். 3ம் நிலை நூலகர் கிருஷ்ணகுமாரி வரவேற்றார். நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் ரமா முன்னிலை வைத்தார். வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி பொன் ராணி, அரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பேசினார். வாசகர் வட்ட தலைவர் சந்திரன், எழுத்தாளர் சுவாமிநாதன், குமரி செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் 138 கிளை நூலக நூலகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விளையாட்டு, கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட மைய நூலக நூல் கட்டு நர் சசிகுமார் நன்றி கூறினார்.