சமுதாய கோயிலை ஒரு குடும்பத்தினர் மட்டும் கும்பாபிஷேகம் நடத்த முயன்றதால் எதிர்ப்பு தெரிவித்து ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க முயன்ற பொதுமக்கள்
பொதுமக்கள்;
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம் உப்புக்கோட்டைகிராமத்தில் வரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை 10 சமுதாயத்தை சேர்ந்தோர் கும்பிட்டு வருகின்றனர்.இந்தநிலையில் கடந்த ஜீன் மாதம் கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாயுத பூஜை நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று வந்தது. இந்த கோவிலில் வருகிற பிப்ரவரி 10 ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருந்த நிலையில் அறநிலையத்துறை உதவியுடன் தனிபட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்த நிலையில் பொதுமக்கள் கும்பாபிஷேக விரதத்தை கைவிட்டனர். மேலும் தனிப்பட்ட குடும்பத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதை எதிர்த்து கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் தலைமையில் இரு தரப்பினரிடையும் பேச்சுவார்த்தை நடத்தபட்டது பேச்சுவார்த்தையில் தற்போது கும்பாபிஷேகத்தை கைவிட்டுவிட்டு பின்னர் ஒரு தேதி குறித்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றினைந்து கும்பாபிஷேகத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் தனிபட்ட குடும்பத்தினர் அறநிலையத்துறையத் துறை உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி பெற்று பத்திரிகை அடித்து கும்பாபிஷேகத்திற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் இல்லையென்றால் கும்பாபிஷேகம் நடத்த வேண்டாம் எனக் கூறி அறநிலையத்துறை தற்காலிக தக்கார் மற்றும் தனி குடும்பத்தை எதிர்த்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் தங்களின் குடியுரிமையான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை ஒப்படைத்து போராட்டம் நடத்தினர் பின்னர் சமுதாயத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக மனு அளித்தனர்.