சாலை விழிப்புணர்வு ஊர்வலம் : எஸ் பி பங்கேற்பு
இலவுவிளை மார் எப்ரேம் கல்லூரியில்;
மார்த்தாண்டம் அருகே இலவுவிளை மார் எப்ரேம் இன்ஜினியரிங் கல்லூரியில் ரோடு சேப்டி கிளப் துவக்க விழா நடந்தது மாணவி நிதிஷா வரவேற்றார் தாளாளர் பங்கு பணியாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார் முதல்வர் டாக்டர் லெனின் பிரைட், டிஎஸ்பி நல்ல சிவம், கல்லூரி டீன் ஆஸ்டின் ஆகியோர் பேசினர். எஸ் பி ஸ்டாலின் ரோடு சேப்டி கிளப்பை துவக்கி வைத்து பேசியதாவது:- இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேரும் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேரும் விபத்தில் இறக்கிறார்கள் குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 332 பேர் இறக்கிறார்கள் இது ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் என்று நிலைமையில் உள்ளது. விபத்துக்கு காரணம் 85% மனிதத் தவறுகள் என்று சொல்லப்படுகிறது ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகம், மது போதையில் வாகனங்களில் செல்வதால் விபத்துகள் நடக்கின்றன. கவனக்குறைவால் தான் விபத்து நடக்கிறது. இவ்வாறு எஸ்.பி ஸ்டாலின் பேசினார் தொடர்ந்து இலவுவிளையிலிருந்து விரிகோடு, மார்த்தாண்டம், குழித்துறை வழியாக திருத்துவபுரம் வரை பைக் பேரணி நடந்தது.