வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்!
வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் முன் அக்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி.சுரேஷ்குமார் உட்பட 49 பேரை போலீசார் கைது செய்தனர்.