தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்!
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார்.;
வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் குண ஐயப்பதுரை உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.