பிள்ளையார்குப்பத்தில் பால்குட திருவிழா!
புற்று மாரியம்மன் கோயிலில், 7ஆம் ஆண்டு பால்குட திருவிழா கோலாகலமாக தொடங்கியது.;
வேலூர் மாவட்டம் பெருமுகை அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள புற்று மாரியம்மன் கோயிலில், 7ஆம் ஆண்டு பால்குட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. காலை 10 மணிக்கு பால் குடம், பூ கரகம், சாமி திருவீதி உலா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பொதுமக்களுக்கு அன்னதானமும் நடந்தது. இந்த விழாவில், பக்தர்கள் தலையில் பூ கரகம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.