சேலம் திருநம்பியை காதலித்து திருமணம் செய்த பட்டதாரி பெண் .

சுயமரியாதை திருமணம் செய்துகொண்டார்;

Update: 2025-08-13 03:44 GMT
சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகள் இலக்கியாஸ்ரீ (வயது 21). பி.எஸ்சி பட்டதாரி. இதே போல சேலத்தாம்பட்டியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் கார்த்திக் (21). பி.எஸ்சி பட்டதாரியான இவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி. இலக்கியாஸ்ரீயும், கார்த்திக்கும் ஒரே கல்லூரியில் படித்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள சுயமரியாதை திருமண மையத்தில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து நேற்று காதல்ஜோடிக்கு அங்கு திராவிடர் கழக நிர்வாகிகள் முன்னிலையில் சுயமரியாதை திருமண நடைபெற்றது. மாலை மாற்றி உறுதி மொழி ஏற்று சுயமரியாதை முறைப்படி திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு திராவிடர் கழகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News