தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில்

300 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன;

Update: 2025-08-13 03:46 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி 15-ந் தேதி (சுதந்திர தினம்) மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் 300 சிறப்பு பஸ்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை இயக்கப்படுகின்றன. சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் அரசு பஸ்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு மையம் மற்றும் இணையதளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம். எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Similar News