சேலம் அருகே உள்ள பள்ளிப்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக வீராணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் (வயது 49) என்பவர் வீட்டின் அருகே சட்டவிரோதமாக மது விற்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.