வாலாஜா அருகே சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை!;
வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குமணந்தாங்கல் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குமணந்தாங்கல் கிராமத்தில் தார் சாலை போடப்பட்டது. தற்போது இந்த தார் சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.