குமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் வழியாக இன்று புதன்கிழமை காலை 6மணி அளவில் மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி பழங்களுடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் பின்னால் பி சான்ட் ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி கனக ரக லாரி ஒன்றும் சென்று கொண்டிருந்தது. மணல் லாரி திடீரென முன் செல்ல முயற்சித்த போது விபத்து ஏற்பட்டது. இதில் பழ லாரி பாலத்தில் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. பழ லாரி டிரைவர் முருகன் என்பவர் காயம் அடைந்தார். களியக்காவிளை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனிமவள லாரி டிரைவர் அனிஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.