ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலையில்;

Update: 2025-08-13 03:55 GMT
ஓமலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓமலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா சரவணன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் வக்கீல் சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத்தொடர்ந்து சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்று பேசினார். இதில் ஓமலூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மோகன்ராஜ், அ.தி.மு.க. பேரூர் மாணவரணி துணை செயலாளர் திவாகர், வடக்கு ஒன்றிய பாசறை துணை செயலாளர் சிவசக்தி ஆகியோர் ஏற்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் விமல் ராஜ், செந்தில்குமார், கருப்பூர் நகர பேரவை செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News