சேலம் நிறைவாழ்வு முதியோர் இல்லத்திற்கு நல உதவி
விநாயகா மிஷன் நிர்வாகத்தினர் வழங்கினர்;
சேலம் குரங்குசாவடி டவுன் பிளானிங் நகர் மற்றும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் நிறைவாழ்வு முதியோர் இல்லம் இயங்கி வருகின்றன. இங்கு 70 முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட முதியவர்கள் படுக்கை நிலையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை லிட்டில் பியர்ல்ஸ் அறக்கட்டளை நடத்தி வருகிறது. இந்தநிலையில் சீரகாபாடியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவை, கல்வி சேவை மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் பல்வேறு சேவை பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் நிறைவாழ்வு இல்லத்தின் தன்னலமற்ற சேவையை பாராட்டி சீரகாபாடியில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ‘கதிர் 56’ விழாவில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தலைவர் சரவணன் சண்முகசுந்தரம் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கும் நலத்திட்ட உதவிக்கான காசோலைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் இயக்குனர் காமாட்சி சரவணன், துணை தலைவர் கோகுல் கிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் வசுந்தரா, மருத்துவர் முருகன், சாம் தம்புராஜ், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் நன்றி கூறினார்.