மதுரை மேயரின் கணவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட மதுரை மேயரின் கணவர் இன்று காலை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்ட மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன். வசந்த் மருத்துவமனையில் அனுமதி இன்று காலை மதுரைக்கு அழைத்து வரப்பட்டார் அவரை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகம், இசிஜியில் மாறுதல் உள்ளதாக மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.