மன்னார்குடி வீரனார் கோவிலில் கரக வீதி உலா
கணிக்கத் தெருவில் உள்ள வீரனார் கோவில் ஆடி திருவிழாவில் கரக வீதி உலா கோலாகலம்;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை நகர் அருகே உள்ள கணிக்கர் தெருவில் வீரனார் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்ற வருகிறது நேற்று இரவு கரக வீதி உலா நடைபெற்றது. மன்னார்குடி திருப்பாற்கடல் குளக்கரையில் இருந்து வீரனார் பார்வதி சிவன் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்து பக்தர்கள் வண்ண ஒளி விளக்கில் நடனமாடியபடி ஊர்வலமாக சென்றனர்.வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.