மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு
மதுரை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து இலக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது;
மதுரை விமான நிலையத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைவீரர்கள் விமான நிலையத்தை சுற்றிலும் இரவு பகலாக வாகனங்களில் ரோந்து வருகின்றனர். அதிவிரைவு அதிரடி படை வீரர்கள் விமான நிலைய உள்வளாகத்திலும் தமிழக போலீசார் 24 பேர் கொண்ட குழுவினர் வெளிவளாகம் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.