லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது!

வேலூர் மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-08-13 09:26 GMT
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி நடத்தப்பட்டு வருவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், முகமது பாஷா (42) என்பவர் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் விற்றதாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் ரூ.7,300 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News