ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!
வேலூர் மாவட்ட ஊராட்சி குழுக்கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமையில் நடந்தது;
வேலூர் மாவட்ட ஊராட்சி குழுக்கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி ஊராட்சியில் ரூ.14.66 லட்சம் மதிப்பில் சாலை பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பேசிய தலைவர் பாபு, "மாவட்ட ஊராட்சி குழு சார்பில் ரூ.1.50 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.