வேலூர் சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்!
வேலூரில் சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது.;
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில், சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில், தமிழ்நாடு, கர்நாடக, கேரள மாநிலங்களைச் சேர்ந்த உதவி ஜெயிலர்கள், உதவி ஜெயில் சூப்பிரண்டுகள் உள்பட 16 பேருக்கு 3 மாத பயிற்சி முகாம் தொடங்கியது. விழாவிற்கு ஆப்கா இயக்குனர் பிரதீப் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். பேராசிரியர் பியூலா இமானுவேல் வரவேற்றார். பேராசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.