ஆற்காடு அருகே பள்ளி வளாகத்தில் மது பிரியர்களின் அட்டகாசம்!
பள்ளி வளாகத்தில் மது பிரியர்களின் அட்டகாசம்!;
ஆற்காட்டில் அமைந்துள்ள சரஸ்வதி தனகோட்டி ஆரம்பப்பள்ளி வாசலிலேயே சமூக விரோதிகள் இரவு நேரங்களில் மது அருந்துவதும், அந்த மது பாட்டில்களை பள்ளி வளாக வாசலில் வீசி செல்கின்றனர். மேலும் அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரிதும் சிரமம் அடைகின்றனர். இதை துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.