வாலிபர் மர்ம மரணம் -போலீசார் விசாரணை!
வாலிபர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (22), கட்டிட தொழிலாளி. இவரது தாய் இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த தாமோதரன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.