கே.வி.குப்பம் அருகே பைக் திருட்டு -போலீசார் விசாரணை!
கே.வி.குப்பம் அருகே பைக் திருட்டு -போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப்குமார். இவர் தனது பைக்கை பசுமாத்தூர் ரைஸ்மில் எதிரில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்துக்கு பிறகு திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடு போனது. இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் சந்தீப்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.