பஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது!
மாணவியிடம் சில்மிஷம் செய்த பஸ் கண்டக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;
ராணிப்பேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் கல்லூரி முடிந்து திருவலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது அந்த பஸ் கண்டக்டர் காண்டீபன் (40) என்பவர் மாணவியிடம் டிக்கெட் கொடுப்பது போல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி காட்பாடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் காண்டீபனை கைது செய்தனர்.