ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு!
ஒடுகத்தூர் அருகே மலைப்பாம்பு ஆட்டை விழுங்கியது.;
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். அருகில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது 15 அடி நீளம் உள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வந்த வனத்துறையினர் மலை பாம்பை பிடித்து, அருகில் உள்ள காட்டில் விட்டனர்.