காவல்துறையின் மீது மதுரை எம்.பி கண்டனம்
சென்னையில் நேற்று நடந்த காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி மதுரை எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்;
மதுரையின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி வெங்கடேசன் தமிழக காவல்துறை கண்டித்து சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது இரவோடு இரவாக காவல்துறை நடத்திய ‘அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல். அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை. அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும். உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை என்று கூறியுள்ளார்.