மத்திகிரி:டூவீலர் மோதி விபத்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.

மத்திகிரி:டூவீலர் மோதி விபத்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-08-14 11:35 GMT
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ்குமார் (34). இவர் மத்திகிரி அருகேயுள்ள கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி அன்று இரவு அத்திப்பள்ளி - கொத்தகொண்டப்பள்ளி சாலையில் நடந்து சென்றபோது. அந்த வழியாக வந்த டூவீலர் முகேஷ்குமார் மீது மோதினார்.அவர் படு காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முகேஷ்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் மாநகர போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News