கிருஷ்ணகிரி: உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு வழிகாட்டல்

கிருஷ்ணகிரி: உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு வழிகாட்டல்;

Update: 2025-08-15 01:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இன்றளவும் உயர்கல்வி சேராத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயில "உயர்வுக்குப் படி" என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டையில் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஒசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் பெரியசாமி, மாவட்ட முதன்மை கல்வி கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் சௌ.கீதா, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

Similar News