காவேரிப்பாக்கம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி;

Update: 2025-08-15 06:29 GMT
நெமிலி அடுத்த நெல்வாய் கண்டிகை, தென்னல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). நெல் அறுவடை எந்திர டிரைவர். காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள, விவசாயி ஒருவருக்கு சொந்த மான நெல் அறுவடை எந்திரத்தில் டிரை வராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 10-ந் தேதி காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம், பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் அருகே, விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதிக திறன் கொண்ட மின்சார ஒயர் உராய்ந்து, சரவணனின் கழுத்து மற்றும் தலையில் பலத்த காயமடைந்தார். இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு, ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல்சிகிச் சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்மு கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News