பிரம்மரிஷி மலையில் சுதந்திர தின விழா

பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் இந்திய நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் இசைக்க, தவத்திரு தவயோகி தவசிநாதன் சுவாமிகள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.;

Update: 2025-08-15 06:47 GMT
பிரம்மரிஷி மலையில் சுதந்திர தின விழா பெரம்பலூர் அருகே, எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் இந்திய நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் இசைக்க, தவத்திரு தவயோகி தவசிநாதன் சுவாமிகள் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். பின் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி ராஜகுமார் அவர்கள் பள்ளி குழந்தைகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு நோட்டு, பேனா பரிசு வழங்கினார்கள், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News