நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் உயர் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் உயர் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.;
அரியலூர், ஆக.15 - அரியலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உயர் மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர் பொ.ரத்தினசாமி. சுதந்திர தினத்தையொட்டி, அரியலூர் அடுத்த அஸ்தினாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர்,கலந்து கொண்டு, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.அப்போது, அரசு அலுவலகங்களை தேடி மக்கள் அலைய வேண்டிய சூழலை நீக்கும் வகையில் தமிழக முதல்வர், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தி வருகிறார். அந்த முகாமில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தால் அவற்றின் மீது 45 நாள்களுக்குள் தீர்வு காணப்படும். நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், உயர் மருத்துவ பரிசோதனைகளை பொதுமக்கள் செய்து பயன்பெறலாம் என்றார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.சிவராமன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பாலசுப்ரமணியன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதே போல், கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி செயலர் பா.குமாரி தலைமை வகித்தார். வாலாஜா நகரத்தில், ஊராட்சி செயலர் மு.தமிழ்குமரன், தாமரைக்குளத்தில், ஊராட்சி செயலர் முத்து, ஓட்டகோவிலில் அழகுவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ச.முத்துகுமரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி ஆ.மரகதம் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். :