ஓசூர் அருகே மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.
ஓசூர் அருகே மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள பேரிகை அடுத்த காட்டிநாயக்கன்தொட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இ ந்த பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்தஉணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள், மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 20 மாணவர்கள் பேரிக்கை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.