சுதந்திர தினவிழாவை முன்னிட்டு எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம்
சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தன் குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள்.;
பெரம்பலூர் மாவட்டம் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் கலந்து கொண்டார். இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் இன்று (15.08.2025) கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் கலந்து கொண்டார் இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கிராமப்புற பண்ணை மற்றும் பண்ணை சாராத வாழ்வாதார நடவடிக்கைகள், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் கிராம ஊராட்சியின் வரவு செலவு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. ஊராட்சியில் நடைபெற்றுவரும் இதர வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதன் தகவலை சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தன் குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், இந்து சமய அறநியைலத்துறை மாவட்ட நியமன குழுத்தலைவர் ஆ.கலியபெருமாள், அறங்காவலர் குழு உறுப்பினர் டி.சி.பி.பாஸ்கர், திருச்சி மண்டல இணை ஆணையர் சி.கல்யாணி, உதவி ஆணையர் உமா, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, ஆய்வாளர் செல்வி தீபலட்சுமி, பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், இமயவர்மன், வட்டாட்சியர் பாலசுப்ரணியன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.