சென்னையில் நடைபெறும் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு எங்கள் (ஊராட்சியின் பெயர்) கிராமசபையின் முழு ஆதரவை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தூய்மைப் பணிகளை உள்ளாட்சி அரசுகளிடம் ஒப்படைத்து, அதாவது தூய்மைப் பணியாளர்களை அந்தந்த மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சி அரசுகளின் பணியாளர்களாக மாற்றி, பணி நிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்தியும்;
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் நடைபெறும் மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு எங்கள் (ஊராட்சியின் பெயர்) கிராமசபையின் முழு ஆதரவை வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட நகரப்புற உள்ளாட்சிகளில் (மாநகராட்சி/ நகராட்சி/ மற்றும் பேரூராட்சி) தனியாரிடம் உள்ள தூய்மைப் பணிகளை உள்ளாட்சி அரசுகளிடம் ஒப்படைத்து, அதாவது தூய்மைப் பணியாளர்களை அந்தந்த மாநகராட்சி/ நகராட்சி/ பேரூராட்சி அரசுகளின் பணியாளர்களாக மாற்றி, பணி நிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்தியும் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதியத் தொகையை அவர்களின் வேலைப் பளுவிற்கு ஏற்ப உயர்த்தி வழங்குவதற்கான அதிகாரத்தை அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கு/ கிராமசபைக்கு அளிக்குமாறு அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.