அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

அரசு பள்ளி மாணவருடன் சேர்ந்து 79 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடிய ரோட்டரி சங்கத்தினர்;

Update: 2025-08-15 15:10 GMT
ரோட்டரி சங்கம் பெரம்பலூர் காட்டன் சிட்டி சார்பில் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் இன்று 15-8-25 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் மாயக்கிருஷ்ணன் முன்னிலையில் ரோட்டரி சங்கம் தலைவர் பாண்டியன் கொடியேற்றினார். செயலர் ராம்குமார், வேல்முருகன், செந்தில்குமார் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி நன் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். சுதந்திர தினத்தின் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம். உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர்கள் செல்வராணி சிலம்பரசி அருணா கார்த்திகா பிரபாகரன் , பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் இந்திராணி, மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர் ரெட்கிராஸ். சாரணர் சாரணியர் சீருடையில் சிறப்பித்தனர்.

Similar News