சூளகிரி ஆருகே மதுபானம், புகையிலை கடத்திய டிரைவர் கைது.

சூளகிரி ஆருகே மதுபானம், புகையிலை கடத்திய டிரைவர் கைது.;

Update: 2025-08-16 02:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் உள்ள சின்னாறு அருகில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் ரூ. 4,160 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரூ.2,430 மதிப்புள்ள 24 பாக்கெட் கர்நாடகா மதுபானம்இருப்பது தெரியவந்தது. விசாரணையில் பெங்களூருவில் இருந்து அரக்கோணத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதை அடுத்து அரக்கோணத்தை சேர்ந்த கவுதம்(24) டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபானம், புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்

Similar News